பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சாதியத்தின் கோர முகத்தைப் பட்டவர்த்தனமாகக் கிழித்தெறிந்த படம் 'ஆர்ட்டிக்கிள் 15'. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கிவருகிறார்.
இந்தப் படத்தை ரோமியா பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். போனி கபூரின் பே வியூ புரோஜக்ட் எல்எல்பி, ஜீ ஸ்டுடியோ நிறுவனங்கள் படத்தை இணைந்து வழங்குகின்றன.
-
It’s time to fight for what’s right! Catch the official teaser of #NenjukkuNeedhi in cinemas and online!https://t.co/5j9hExON0v@ZeeStudios_ @BoneyKapoor @BayViewProjOffl #RomeoPictures @mynameisraahul @Arunrajakamaraj @actortanya @Aariarujunan @dineshkrishnanb @dhibuofficial
— Udhay (@Udhaystalin) February 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It’s time to fight for what’s right! Catch the official teaser of #NenjukkuNeedhi in cinemas and online!https://t.co/5j9hExON0v@ZeeStudios_ @BoneyKapoor @BayViewProjOffl #RomeoPictures @mynameisraahul @Arunrajakamaraj @actortanya @Aariarujunan @dineshkrishnanb @dhibuofficial
— Udhay (@Udhaystalin) February 11, 2022It’s time to fight for what’s right! Catch the official teaser of #NenjukkuNeedhi in cinemas and online!https://t.co/5j9hExON0v@ZeeStudios_ @BoneyKapoor @BayViewProjOffl #RomeoPictures @mynameisraahul @Arunrajakamaraj @actortanya @Aariarujunan @dineshkrishnanb @dhibuofficial
— Udhay (@Udhaystalin) February 11, 2022
‘ஆர்ட்டிகள் 15’ - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்?
'நெஞ்சுக்கு நீதி' தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் காவல் துறை அலுவலராக நடித்துள்ள உதயநிதியுடன் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர், மேலும் மயில்சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீசருக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 'நெஞ்சுக்கு நீதி' என்னும் தலைப்பில் அவரது சுயசரிதை நூலை எழுதியிருந்தார். தற்போது அதன் தலைப்பையே உதயநிதி படத்திற்குத் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியாயத்து பக்கம் நிக்கிறதுதான் சார் நியூட்ரல்
நடுவுல நிக்கிறதுக்கு பேரு இல்ல Neutral, நியாயத்துக்கு பக்கம் நிக்கிறதுதான் நியூட்ரல் என்று உதயநிதி ஸ்டாலின் பேசும் வசனம், "ஒருத்தன் நல்லவனா இருக்கிறதும் கெட்டவனா இருக்கிறதும் ஜாதியில இல்ல சார், அவன் உள்ள இருக்குற குணத்துலதான் சார்" என மயில்சாமி பேசும் வசனங்கள் நிச்சயம் திரையரங்கில் கைத்தட்டல்களை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வலியில் கத்துனாக்கூட ஏன் கத்துனன்னுதான் கேப்பானுங்களே தவிர, அடிக்கிறவனை எதுக்கு அடிக்கிற எனக் கேட்க நாதியில்லை என ஆரி பேசும் வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அனல் தெறிக்கும் வசனங்களுடன் டீசர் அட்டகாசமாக மிரட்டுகிறது.