தமிழில், சாமி 2, கோமாளி, வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரவீனா, பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதுதவிர மலையாள நடிகைகளுக்கு, பின்னணி குரலும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் கேரளாவில் வசிக்கும் இவர் வீட்டின் பின்புறத்தில் இருந்த கோழிக்கூட்டில் நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரவீனா அருகில் உள்ள பாம்பு பண்ணைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்தவர்கள், கோழிக்கூட்டிற்குள் பதுங்கியிருந்த குட்டி பாம்பை பிடித்தனர்.
முதலில் பாம்பை கையில் வாங்க பயந்த பிரவீனா பிறகு தைரியமாக கையில் பிடித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, “பாம்புகளைப் பார்க்கும்போது மக்கள் பீதியடைவார்கள். நமக்கு அது தீங்கு விளைவிக்குமோ என்ற பயம் தான் அதற்கு காரணம். அந்த எண்ணத்தை விட்டுவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.
பீரவினா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதையும் படிங்க: மீண்டும் நம்மை மகிழ்விக்க வருகிறான் ‘ஹெர்குலஸ்’