ETV Bharat / sitara

விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' பாடல்கள் வெளியீடு - vijay sethupathi movie updates

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள, 'துக்ளக் தர்பார்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.

துக்ளக் தர்பார்
துக்ளக் தர்பார்
author img

By

Published : Aug 19, 2021, 6:55 AM IST

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஐந்து முதல் ஆறு படங்களைக் கொடுத்துவருபவர் விஜய் சேதுபதி. ரசிகர்களால் அன்போடு மக்கள் செல்வன் என அழைக்கப்படும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் விஜய் சேதுபதி, தொலைக்காட்சியிலும் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள, 'துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பார்த்திபன், கருணாகரன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

தல 61 படத்தின் இசையமைப்பாளர் இவரா?

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாகத் திரையரங்குகள் திறக்காத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

தற்போதுவரை திரையரங்குகள் திறக்காததால், 'துக்ளக் தர்பார்' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இறுதியாக, 'துக்ளக் தர்பார்' திரைப்படம், நேரடியாக பிரபல தொலைக்காட்சியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் 'துக்ளக் தர்பார்' படத்தை புரமோஷன் செய்யும் வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி நடித்த ’96’ பட மூலம் பிரபலமான கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான பாடல்கள் அனைத்தும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. அடுத்த மாதம் 10ஆம் தேதி வெளியாகும் இப்படம் மீது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இதையும் படிங்க: லைகா வழக்கில் நடிகர் விஷாலுக்கு வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.