அறிமுக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு, கருணாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்ரிப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சுனைனா நடிக்கிறார். இப்படத்தை சாய் ஃபிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன், பிரவீன் குமார் ஆகியோர் தயாரித்தின்றனர்.
செப்டம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சுனைனா தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தியாவில் முதல் முறையாக அமெரிக்காவின் பிட்புல் (pitbull) ரக நாயுடன் நடிக்கின்றேன்.
இந்த நாய் மீது நானும் படப்பிடிப்பு குழுவினரும் மிகுந்த அன்பு வைத்துள்ளோம். அதேபோல், இந்த நாய்க்கு தேவையான பாதுகாப்பையும் நாங்கள் கொடுக்கின்றோம். விரைவில் இந்த நாயை சந்திப்பீர்கள்’ என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: மும்பை தாக்குதலின் உண்மை கூறும் 'ஹோட்டல் மும்பை' ரிலீஸ் தேதி அறிவிப்பு