ETV Bharat / sitara

#HBDSanthanam: நகைச்சுவை நடிகராக சந்தானம் கலக்கிய டாப் ஐந்து படங்கள் - சந்தானம் பிறந்தநாள் ஸ்பெஷல்

சந்தானம் நகைச்சுவை நடிகராக நடித்த, டாப் 5 படங்களின் பட்டியலை பார்ப்போம்.

நகைச்சுவை நடிகராக சந்தானம் கலக்கிய டாப் ஐந்து படங்கள்

author img

By

Published : Jan 21, 2020, 12:52 PM IST

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, கோலிவுட்டில் நகைச்சுவை நடிகரானவர் நடிகர் சந்தானம். பிறகு படிப்படியாக முன்னேறி தற்போது நடிகராக உருவெடுத்துள்ளார். அடுத்தவர்களை சகஜமாக டைமிங்கில் கலாய்ப்பது தான் இவரது சிறப்பே. இன்று நடிகர் சந்தானம் தனது 40- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள், திரை பிரபலங்கள் என்று அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி அவர் நடித்த படங்களின் நகைச்சுவை காட்சிகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சந்தானம் நகைச்சுவை நடிகராக நடித்த படங்களில், டாப் 5 படங்களின் பட்டியலை பார்ப்போம்...

சிவா மனசுல சக்தி:

நகைச்சுவை நடிகராக சந்தானம் கலக்கிய டாப் ஐந்து படங்கள்
சிவா மனசுல சக்தியாக சந்தானம்

ஜீவா ஹீரோவாக நடிக்க, சந்தானம் நகைச்சுவை நடிகராக கலக்கி இருந்த படம் சிவா மனசுல சக்தி. ஜீவா, அனுயாவின் டாம் அண்ட் ஜெர்ரி காதல் நடுவே சந்தானம் செய்யும் காமெடி இன்றும் நம்மை விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கும். அதிலும் குறிப்பாக ஜீவா- சந்தானம் தனது நண்பர்களுடன் இணைந்து ஹீரோயின் அனுயாவை தொலைப்பேசி மூலம் கலாய்ப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் சந்தானத்தின் கேரியரில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அது மட்டுமின்றி இப்படத்திற்காக சந்தானத்திற்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தன.

ஒரு கல் ஒரு கண்ணாடி:

ஒரு கல் ஒரு கண்ணாடிக்காக

ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. உதயநிதி ஸ்டாலின் இப்படம் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடித்த முதல் படமே ஹிட் அடித்தது. அதற்கு மிக முக்கிய காரணம், இப்படத்தில் சந்தானம்- உதயநிதி ஸ்டாலின் காம்போ தான். இருவரும் இணைந்து வயிறுவலிக்க ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.

இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து இரண்டு படங்களில் நடித்தனர். இருப்பினும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம் என்றால், அது கண்டிப்பாக 'ஒரு கல் ஒரு கண்ணாடி ' தான். அதிலும் போலீஸ் ஸ்டேஷனில் சந்தானம் செய்யும் நகைச்சுவை, இன்று வரை ரசிகர்களை சிரிக்க வைக்க தவறியதில்லை.

என்றென்றும் புன்னகை:

என்றென்றும் புன்னகையுடன் சந்தானம்

வினய், ஜீவா, சந்தானம் என்று மூன்று ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் என்றென்றும் புன்னகை. மூன்று நண்பர்கள் எப்போதும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் என்றும் அவர்கள் பிரிந்து சென்றால் எப்படி இருக்கும் என்பதை ஐ அஹ்மத் அழகாக இயக்கி இருப்பார். அதிலும் சந்தானம் மது அருந்திவிட்டு தனது மனைவியிடம் பேசும் சில காட்சிகள் இன்று பார்த்தால் கூட நம் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா:

கண்ணா லட்டு திண்ண ஆசையா

சேது, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோருடன் சந்தானம் இணைந்து நடித்திருந்த படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. ஹீரோயின் விஷாகா சிங்கை மூவரும் இணைந்து காதலிக்க அதில் சந்தானம் தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்து ஈர்த்தார். மேலும் சந்தானம்- பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் காம்போவில் வந்த நகைச்சுவை தான் இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியே.

தில்லுக்கு துட்டு:

துட்டுக்கு தில்லான சந்தானம்

திகில் கலந்த நகைச்சுவை படமாக, கடந்த 2016- ஆம் ஆண்டு வெளியான படம் தில்லுக்கு துட்டு. பேய்கள் கூட்டத்தில், மாட்டிக் கொள்ளும் சந்தானம், அவற்றை நகைச்சுவையாக எப்படி கையாண்டார் என்பதே படத்தின் கதை. சந்தானம் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு தில்லுக்கு துட்டு 2 மற்றும் A1 போன்ற படங்கள் வெளியானது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு டகால்ட்டி, சர்வ சுந்தரம், டிக்கிலோனா போன்ற படங்கள் வெளியவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உருவாகும் 'அரண்மனை 3': நாயகன் நயாகி இவர்களா...?

Intro:Body:

Santhanam Birthday

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.