ஹாலிவுட்டில் 'Forrest Gump', 'Catch Me If You Can', 'The Terminal', 'Captain Phillips', 'The Da Vinci Code' உள்ளிட்ட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டாம் ஹாங்ஸ்.
புதிய படத்தின் படப்பிடிப்புக்காக டாம் ஹாங்ஸ், தனது மனைவி ரீட்டா வில்சனுடன் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றார். அங்கு, அவர்களுக்கு கரோனோ தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர். இதனால் அவரையும் அவரது மனைவியும் பாதுகாப்பு கருதி சிகிச்சைக்காக தனிவார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தங்களது உடல்நலம் குறித்து டாம்ஹாங்க்ஸ் அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார்.
இதனையடுத்து தற்போது கரோனாவில் இருந்து மீண்ட இவர்கள் ஆஸ்திரோலியாவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு திரும்பியுள்ளனர்.