ETV Bharat / sitara

புனித் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ராம் சரண்! - ஆறுதல் கூறிய ராம் சரண்

தெலுங்கு நடிகர் ராம் சரண் மறைந்த புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

Ram Charan
Ram Charan
author img

By

Published : Nov 3, 2021, 4:13 PM IST

கன்னடத் திரையுலகில் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29ஆம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சிகிச்சைக்காக புனித் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

புனித் ராஜ்குமாரின் உடல் மூன்று நாள்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள காண்டீவரா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.

ஆறுதல் கூறும் ராம் சரண்

சிரஞ்சீவி, வெங்கடேஷ், பால கிருஷ்ணன் உள்ளிட்ட திரைத்துறைய சேர்ந்த பலர் புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலியில் கலந்துக்கொள்ள முடியாதவர்கள் தற்போது பெங்களூருவில் உள்ள புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

ஓரிரு நாள்களுக்கு முன்பு நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரபு ஆகியோர் புனித் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். அந்த வகையில், இன்று (நவம்பர் 3) தெலுங்கு நடிகர் ராம் சரண் புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் புனித் ராஜ்குமாரின் சகோதரரும், நடிகருமான சிவராஜகுமாரை ராம் சரண் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க: கதையின் நாயகன்...புனித் ராஜ்குமார் கடந்து வந்த பாதை...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.