ETV Bharat / sitara

'விக்ரம்' ஆரம்பிக்கலாங்களா... வெறித்தனம் காட்டும் லோகேஷ் கனகராஜ் - கமல் கூட்டணி

author img

By

Published : Nov 7, 2020, 5:33 PM IST

சென்னை: கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்'படத்தின் டைட்டில் ட்ராக் தற்போது வெளியாகியுள்ளது.

kamal
kamal

'கைதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், கரோனா தொற்று அச்சம் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து படம் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. கமல்ஹாசனின் 232ஆவது படமாகும்.

இந்நிலையில் இன்று தனது 66ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் கமலுக்கு ட்ரீட் தரும் விதமாக லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் 232வது படத்தின் டைட்டில் ட்ராக் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். 'விக்ரம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் கேங்ஸ்டர் ஸ்டைலில் உள்ளது.

ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், காவல்துறை அலுவலர்களை விருந்துக்கு அழைத்து அவர்களை வேட்டையாடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.