'இமைக்கா நொடிகள்' பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிவரும் திரைப்படம் கோப்ரா.
விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, ரஷ்யாவில் நடந்து முடிந்த நிலையில், கரோனா காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விக்ரம் 20 கெட்டப் போட்டு நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அறிவித்தபடி கோப்ரா படத்தின் முதல் பாடலாக 'தும்பி துள்ளல்' வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.