கரோனா வைரஸின் தாக்கம், தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மற்றொரு பக்கம் கரோனா குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தும்பா புரொடக்ஷன் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
'விழா கண்ட நகர் எங்கே' என்று தொடங்கும் பாடலை டாக்டர் பாலன் எழுதியுள்ளார். இரவு, பகல் பாராமல் கரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களின் சேவைகள் இதில் பாராட்டப்பட்டுள்ளது. சந்தோஷ் சேகர் இசையமைத்துள்ள, இப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இத்தாலி சினிமாவில் மீண்டும் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்!