அறிமுக இயக்குநர் ப்ரெட்ரிக் இயக்கத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் 'பொன்மகள் வந்தாள்' படத்தில் ஜோதிகா, பார்த்திபன், கே. பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் 200க்கும் அதிகமான நாடுகளில் உள்ள ப்ரைம் உறுப்பினர்களுக்கு மே 29ஆம் தேதி முதல் விருந்தளிக்கப்போகிறது.
ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர் 2004ஆம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
வெண்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஜோதிகா ஒரு வழக்கறிஞர். தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணை காப்பாற்றவும் உண்மையை வெளி கொண்டுவர சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தேடிப் பிடித்து சரி செய்கிறார். இதனால் பெயருக்காகவும், புகழுக்காகவும் ஆசைப்படுவதாக அவதூறுகளைச் சந்திக்கும் வெண்பா, தன்னை நோக்கி வரும் சவால்களைத் தாண்டி நீதியை நிலைநாட்ட தொடர்ந்து முயல்கிறார். இதன் விளைவாக மேற்பரப்பில் பார்க்கும் எதுவும், நம் கண்ணை ஏமாற்றும் ஒரு மோசமானப் புதிராகத்தான் இருக்கும் என்பதாக இந்த வழக்கு விவரிக்கிறது.
இந்த வழக்கில் நேர்மையான ஒரு வழக்கறிஞர், தவறாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு அப்பாவி பெண்ணை விடுவிக்கும் முயற்சிகள் குறித்து கூறும் பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் 'பொன்மகள் வந்தாள்' என்று கூறப்படுகிறது. பல எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையே கோர்ட் ட்ராமா ஜானரில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படம் எப்படி இருக்கப்போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதையும் படிங்க... 'நிஜ வாழ்க்கையில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பாதிப் படங்கள் சித்தரிப்பதில்லை'