ETV Bharat / sitara

இன்று முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி - திரையரங்க தளர்வுகள்

தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்துவருவதைக் கருத்தில்கொண்டு அளிக்கப்பட்ட தளர்வின்படி, இன்று (பிப்ரவரி 16) முதல் திரையரங்குகள் 100 விழுக்காடு பார்வையாளர்களுடன் இயங்கிவருகின்றன.

இன்று முதல் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி

author img

By

Published : Feb 16, 2022, 8:02 PM IST

இந்திய அளவில் கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல்வேறு தொழில் நிறுவனங்கள் முடங்கின. குறிப்பாகத் திரையுலகத் தொழிலாளர்கள் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர். தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக திரையரங்கங்களில் 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் பொங்கலுக்கு வெளியிடப்படவிருந்த ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்', அஜித்தின் வலிமை ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடந்த பொங்கலன்று வெளியிடப்பட்ட சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் அனைத்துமே மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தன.

இந்நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி ஊரடங்கு தளர்வுகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்படி பல்வேறு ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி இன்று (பிப்ரவரி 16) முதல் திரையரங்குகள் 100 விழுக்காடு பார்வையாளர்களுடன் செயல்படத் தொடங்கியது.

இதையும் படிங்க: பீப் பாடல் விவகாரம்: சிம்பு மீதான வழக்கு ரத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.