ETV Bharat / sitara

தமிழ் சினிமாவின் சுயாதீனத் திரைப்படக் கலைஞர்கள் - ஒரு பார்வை - மாடத்தி

தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் சுயாதீனத் திரைப்படங்களைப் பற்றியும், அதனின் தாக்கம், படைப்பாளிகள் பற்றி இதில் காண்போம்.

தமிழ் சினிமாவின் சுயாதினத் திரைப்படக் கலைஞர்கள் - ஒரு பார்வை

author img

By

Published : Jan 8, 2022, 5:14 PM IST

Updated : Jan 8, 2022, 5:45 PM IST

உலக சினிமாவின் சுயாதீனத் திரைக்கலைஞர்கள்

உலக சினிமாக்களில், வர்த்தகத்தைத் தாண்டி சினிமாவை முழுக்க முழுக்க கலையாக அணுகும் வகையில் பல்வேறு புதிய அலைகள் (New wave) உருவாகின. டாக் மி 95 (Dogme 95), ஃபிரெஞ்ச் நியூ வேவ் (French new wave), இந்தியாவில் பேரெலெல் சினிமா (Parellel Cinema) போன்ற பல்வேறு அலைகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது சுயாதீனத் திரைக்கலைஞர்களின் வருகையே.

சினிமா டிஜிட்டல்மயமாக்கப்பட்டு கருவியாக அனைவரிடமும் சென்ற பிறகு சுயாதீனத் திரைப்படக் கலைஞர்களின் வருகையும், படைப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில், தமிழ் சினிமாவில் அமைதியாக உருவாகிவரும் சுயாதினத் திரைப்படக் கலைஞர்களின் வருகைகளைப் பற்றி இதில் காண்போம்.

உலகளவில் சுயாதீனத் திரைப்படங்களை, மார்டின் ஸ்கார்செஸ்சி, ஜிம் ஜார்முஷ்ச், ஜாபர் பனாஹி, அலஜாண்டிரோ ஜொடொரோஷ்கி, காஸ்பர் நோ, லார்ஸ் வான் டிரையர் என இயக்குநர்களின் பெயர்கள் பெரிய பட்டியலாக நீளுகின்றன. இந்தியாவில் பேரெலெல் சினிமா (Parellel Cinema) என்ற ஒரு அலை தோன்றியிருந்தது, ஆனால் இப்போது அது இல்லை.

சுயாதீனத் திரைப்படம்

2010-க்குப் பிறகு தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குநர்களின் வருகையால் தமிழ் சினிமா புது பரிணாமம் அடைந்தது என்றே சொல்ல வேண்டும். அப்போது வருகைதந்த இயக்குநர்கள் பல புதிய சினிமா பரிணாமத்தையும், முற்போக்குச் சிந்தனைகளையும் திரைப்படத்தில் கொண்டுவந்தனர்.

இவர்களின் சினிமா மெயின் ஸ்ட்ரீம் (Main stream) எனச் சொல்லப்படும் ஜனரஞ்சக சினிமாக்களாகவும் வெற்றிகள் குவித்தன. இவர்களின் சினிமாக்கள் ஜனரஞ்சகத் தன்மையையும் சமூகப் பார்வையையும் பெரிதாகக் கருதி அதை கலைநயத்துடனும் சொல்லப்பட்டிருக்கும்.

ஆனால், உண்மையில் சினிமா என்பது கருத்து சொல்ல மட்டுமா? அதற்கு நிச்சயம் கோட்பாடுகள் அவசியம் தானா? அதை முழுக்க முழுக்க கலையாக மட்டுமே அணுகுவதுதான் சரியா இருக்க முடியுமா? போன்ற கேள்விகள் இன்றளவும் சினிமா ரசிகர்களாலும், விமர்சகர்களாலும், படைப்பாளிகளாலும் விவாதத்திற்குள்ளாகிதான் இருந்துவருகின்றன.

சுயாதீனத் திரைப்படங்கள் என்றால் வெறும் பொருளாதார ரீதியான சுயாதினத் தன்மை வாய்ந்த திரைப்படங்கள் என்று சொல்லிவிட முடியாது. இங்குக் கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகள், வர்த்தகம், வழிமுறை என அனைத்தையும் உடைத்து வெறும் கலையை மட்டும் மூலதளமாக வைத்து படமாக்கப்படும் திரைப்படங்களே சுயாதினத் திரைப்படங்கள்.

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் இந்த சுயாதீனத் திரைப்படக் கலைஞர்களின் வருகை ஆங்காங்கே தெரியவருகிறது. பல உலக சினிமாக்களின் தாக்கங்களினாலும், ஓடிடி போன்ற புதிய திரை வடிவங்களினாலும் பல கலைஞர்கள் பெரிதாகக் கண்டறியப்படுகின்றனர்.

அருண் கார்த்திக்

இயக்குநர் அருண் கார்த்திக்
இயக்குநர் அருண் கார்த்திக்

இக்காலத்து தமிழ் சுயாதீனத் திரைக்கலைஞர்களின் அறிமுகம் இவரிலிருந்து ஆரம்பிக்கலாம். பலருக்கும் இவரே முதன்மையாக அறிமுகமாகிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் இயக்கிய திரைப்படங்கள் இரண்டுதான். இரண்டுமே உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டன.

மிகக் குறைந்த செலவில், கிடைக்கின்ற இடங்களில் வெறும் கலை சிந்தனைகளை மட்டுமே மையமாக வைத்து சிறந்த படைப்புகளை கொடுக்க முடியும் என்பதற்கு இவரின் திரைப்படங்களே உதாரணம்.

சிவபுராணம் திரைப்பட போஸ்டர்
சிவபுராணம் திரைப்பட போஸ்டர்

இவரின் முதல் திரைப்படமான சிவபுராணம் 2016இல் வெளியானது. இந்தத் திரைப்படத்தை வெறும் சில லட்சங்களிலே எடுத்து முடித்தார் அருண். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க கலை சினிமாவாக இருக்கும்.

எளிமையான கதைக்களத்தில், சர்ரியலிச (Surrealism) சிந்தனைகளின் சிறிய தாக்கத்துடன், வசனங்கள் பெரிதாக இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும். ’இது ஒரு கலைஞனுக்கும் அவனின் சிந்தனைக்கும் நடுவே நடக்கும் ஒரு தேடல்’ என்றுகூட இந்தத் திரைப்படத்தின் ஒரு வரிக்கதையாகக் கூறலாம். ஆனால் இயக்குநரின் நோக்கம் அது மட்டுமே சொல்ல வேண்டும் என்பதல்ல. இப்படத்தைப் பல்வேறு கோணங்களில் அணுகிக் கொள்ளலாம்.

v
நசிர் திரைப்பட போஸ்டர்

இவரின் அடுத்த படமான நசிர் 2020இல் வெளியானது. இத்திரைப்படம் உலகப்புகழ் பெற்ற ராட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 1997இல் கோவையில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து கதைக்களம் நகரும். ஒரு சாதாரண இஸ்லாமிய நடுத்தர மனிதனின் ஒரு நாள் வாழ்க்கையே இத்திரைப்படம். இதில் இருக்கும் அரசியல் களத்திற்காக எந்தக் கருத்தோ அல்லது கோட்பாடோ பரப்புரை முறையில் சொல்லப்பட்டிருக்காது.

மிக எளிய முறையில் யதார்த்த சினிமாவாக இத்திரைப்படத்தைக் கையாண்டிருப்பார் இயக்குநர். இதற்காகப் பெரிதும் கள ஆய்வுசெய்து, ஏறத்தாழ இரண்டு ஆண்டு கணக்கில் கோவையில் கலவரம் நடந்த வீதிகளில் தங்கி ஆவணங்களையும், சம்பவங்களையும் சேகரித்து இத்திரைப்படத்தை எடுத்ததாக இயக்குநர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

லீணா மணிமேகலை

இயக்குநர் லீணா மணிமேகலை
இயக்குநர் லீணா மணிமேகலை

பொதுவாக பெண் இயக்குநர்களை ‘பெண் இயக்குநர்கள்’ என்று தனியாக அடையாளப்படுத்துவது பல பெண் இயக்குநர்களுக்குப் பிடிப்படில்லை. சுதா கொங்கரா போன்ற இயக்குநர்கள் கடும் எதிர்ப்புகளைக்கூட பதிவுசெய்திருக்கின்றனர். ஆகவே அவர்களை ’இயக்குநர்கள்’ என்றே அடையாளப்படுத்துவதே சரி.

மாடத்தி திரைப்பட போஸ்டர்
மாடத்தி திரைப்பட போஸ்டர்

சமீபத்திய வெளியான ‘மாடத்தி’ திரைப்படத்தின் இயக்குநர்தான் லீனா மணிமேகலை. இத்திரைப்படம் கலை சினிமாக்களிலும், தமிழ்த் திரையுலகத்திலும் ஒரு முக்கியப் படைப்பு. இயக்குநரின் கதாபாத்திர வடிவமைப்புத் திறன், திரைமொழி என அனைத்தும் சீராக அமைந்திருக்கும்.

இவரின் முதல் திரைப்படம் 2011இல் வெளியான செங்கடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்

இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்
இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்

2015இல் வெளியான ’லென்ஸ்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர்தான் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவரின் முதல் திரைப்படமான ’லென்ஸ்’ ஆபாசப்பட அடிமைத் தனங்களைப் பற்றியும், ஸ்காண்டல் வீடியோக்களின் பாதிப்புகள் பற்றியும் விளக்கியிருக்கும்.

இப்படிப்பட்டத் திரைக்களத்தை தமிழில் சொன்ன முதல் திரைப்படம் இதுதான். அவரின் அடுத்த திரைப்படமான ‘தி மஸ்கிட்டோ ஃபிலொசோப்பி’ (The Mosquito philosophy) தமிழ்ச் சினிமாவில் 'டாக்மி 95' (Dogme 95) அலையின்கீழ் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்.

லென்ஸ் திரைப்பட போஸ்டர்
லென்ஸ் திரைப்பட போஸ்டர்

இத்திரைப்படத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இதில் வரும் எந்த வசனமும் எழுதப்பட்டு பேசவில்லை, எந்த ரீ-டேக்கும் இல்லை. நடிகர்கள் இயல்பாக சூழ்நிலைக்குள் வாழ்ந்தனர்.

மஸ்கிட்டோ பிலாசப்பி திரைப்பட போஸ்டர்
மஸ்கிட்டோ பிலாசப்பி திரைப்பட போஸ்டர்

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் வாழ்வில் ஒரு ராத்திரியில் நடந்த சம்பவத்தை மறு நாளே திட்டமிட்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இது. இத்திரைப்படத்தை வெளியிட நடிகை சுருதி ஹாசன் உதவியதும் குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் சூறாவளி

இயக்குநர் பாண்டியன் சூறாவளி
இயக்குநர் பாண்டியன் சூறாவளி

இந்தப் பட்டியலில் பெரிதும் அறியாத, ஆனால் மிக ஆற்றலுள்ள ஒரு இயக்குநர் இவர்தான். இவர் இதுவரை ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இயக்கியுள்ளார். அத்திரைப்படத்தின் பெயர் ‘டைலெம்மா’ (Dilemma:Some adult's story), இது ஒரு ஓடிடி தளத்தில் வெளியானது.

டைலெம்மா போஸ்டர்
’டைலெம்மா’போஸ்டர்

இவரின் திரைப்படத்தில் வன்முறை, காம உணர்வு, ஆண்களின் உளவியல் என்று பல விஷயங்களைக் கையாண்டிருக்கும். எடுக்கப்பட்ட கதையும், திரைக்களமும் மிக மிக எளிமையானதாகவே இருக்கும். இருப்பினும் இவரின் திரைமொழி மனதினுள் ஒரு அமைதியையும், சிந்தனைகளையும் எழுப்பும்.

இவரின் திரைமொழி நேர்த்தி இதற்கு முன்னரே இவரின் குறும்படமான ‘ஜஸ்ட் எ ரேட்’ (Just a rat) என்ற குறும்படத்தில் வெளிப்பட்டிருக்கும். ஒரு சாதாரண விஷயத்தை திரைமொழியில் தாக்கத்துடன் சொல்வதில் இவர் வல்லவர் என்றே சொல்லலாம்.

இப்படிப்பட்ட கலைஞன் இன்னும் பெரிதாக வெளியே தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயம்தான். நிச்சயம் இவருக்கு மேலும் பொருளாதாரமும், வாய்ப்பும் கிடைத்தால் இன்னும் பல படைப்புகளை நமக்குத் தருவார் என்பதில் ஐயம் இல்லை.

இந்தப் பட்டியலைத் தாண்டி பல்வேறு படைப்பாளிகள் கலை மீது காதல் கொண்டு படைப்புகளைப் படைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பாக ஷியாம் சுந்தர், மனோஜ் லியோல் ஜேசன் இயக்கிய தமிழ் சினிமாவின் முதல் ’மேஜிக்கல் ரியலிசம்’ (Magical realism) திரைப்படமான ’குதிரை வாழ்’ இன்னும் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வெளியாகக் காத்திருக்கிறது.

இப்படிப்பட்ட மாற்றுச் சிந்தனையாளர்களின் வருகையும் படைப்புகளும்தான் தமிழ் சினிமாவை அடுத்த பரிணாமத்திற்கு நகர்த்தும்.

இதையும் படிங்க: நடிகர் சத்யராஜுக்கு கரோனா பாதிப்பு!

Last Updated : Jan 8, 2022, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.