ETV Bharat / sitara

ஜெகபதி பாபுவின் மிரட்டும் கதாபாத்திரம் - மிரளவைக்கும் லுக்..! - பிரபாஸ் புதிய படம்

'சலார்' படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ஜெகபதி பாபு ஏற்றிருக்கும் 'ராஜமன்னார்' என்ற கதாபாத்திரத்தின் போஸ்டரை அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

salaar movie update  salaar movie '  salaar jegapathi babu out look  jegapathi babu  cini news  movie update  latest movie  shooting  ஜெகபதி பாபு  சலார் படத்தில் ஜெகபதி பாபுவின் கதாபாத்திரம்  சலார் படத்தில் ஜெகபதி பாபு  சலார்  பிரபாஸ் புதிய படம்  prabhas latest movie
salaar poster
author img

By

Published : Aug 23, 2021, 4:58 PM IST

'கே ஜி எஃப் சாப்டர் 1', 'கே ஜி எஃப் சாப்டர் 2' ஆகிய படங்களின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் 'சலார்'.

நடிகர் பிரபாஸ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் மாஸான ஆக்ஷன் அட்வெஞ்சர் திரைப்படமாக 'சலார்' உருவாகிறது. இப்படத்தின் அப்டேட்டை இன்று (ஆகஸ்ட் 23) அப்படக்குழுவினர் வெளியிட்டனர்.

மிரட்டலான லுக்

இதில் தெலுங்கின் முன்னணி நடிகரான ஜெகபதி பாபு 'ராஜமன்னார்' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் மிரட்டலான லுக், போஸ்டராக வெளியிடப்பட்டிருக்கிறது.

'சலார்' படத்தில் இடம்பெறும் 'ராஜமன்னார்' கதாபாத்திரம், கதையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதனை போஸ்டர் மூலம் வெளிப்படுத்துவதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த கேரக்டர் லுக் போஸ்டர், 'சலார்' படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டின் இறுதியில் வெளியாகும்

'கேஜிஎஃப்' படத்தின் முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் படத்தின் இயக்குநர் பிரசாத் நீல் மற்றும் பட நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், இப்படத்தின் 20 விழுக்காடு படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாகவும், மீதமுள்ள படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

அப்டேட் மேல அப்டேட்

ராஜமன்னாரின் போஸ்டர் குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறுகையில், ''சலார் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இன்று (ஆக 23) வெளியிடப்பட்டிருக்கும் 'சலார்' படத்தின் புதிய போஸ்டரில், நடிகர் ஜெகபதி பாபு ஏற்றிருக்கும் 'ராஜமன்னார்' என்ற கதாபாத்திரத்தின் தோற்றம் மிரட்டலாக அமைந்திருக்கிறது.

இது ரசிகர்களுக்கு ராஜமன்னார் கதாபாத்திரம் குறித்த கற்பனை கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கும். இப்படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் இந்தக் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை போஸ்டராக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்' என்றார்.

இதனைத்தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல் கூறியதாது, 'சலார் படத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில கதாபாத்திரங்களை பற்றிய லுக், படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் வெளியிடப்படும்' என்றார்.

இதையும் படிங்க: காசேதான் கடவுளடா படப்பிடிப்பு நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.