’அழகி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தங்கர் பச்சான். அதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான ’சொல்ல மறந்த கதை’, ’தென்றல்’, ’பள்ளிக்கூடம்’ உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவரது இயக்கத்தில் 2017ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. தற்போது கரோனா ஊரடங்கில் 13 நாள்களில் ஒரு திரைப்படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன். இயற்கையின் அரவணைப்பில் 13 நாள்கள் இரவும், பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன்.
-
ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன்.
— தங்கர் பச்சான் (@thankarbachan) September 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன். pic.twitter.com/RCWVjt0hEK
">ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன்.
— தங்கர் பச்சான் (@thankarbachan) September 28, 2020
இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன். pic.twitter.com/RCWVjt0hEKஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன்.
— தங்கர் பச்சான் (@thankarbachan) September 28, 2020
இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன். pic.twitter.com/RCWVjt0hEK
மற்றோரு பதிவில், “தொடர்ந்து பேனா பிடித்து எழுதியதில் விரலில் கொப்புளம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் மற்றொரு சிறந்த படைப்புக்கான திரைக்கதையை உருவாக்கம் செய்ய இருக்கிறேன். இரண்டு வாரங்களில் தூய்மையான காற்று தூய்மையான நீர் இயற்கை உணவு இவைகளுடன் கூடிய சூழலில் இதை எழுதி முடித்திருக்கிறேன்.
கரோனா காலத்தில் எனக்கான பணிகளில் பல முன்னேற்றத் தடைகள் இருந்தாலும் இரண்டு சிறந்த திரைக்கதைகள் கிடைக்க உள்ளன எனும் மகிழ்ச்சி அனைத்தையும் மறக்கச் செய்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.