ETV Bharat / sitara

தள்ளிப் போகாதே புதிய ரிலீஸ் தேதி வெளியீடு - அதர்வா புது படங்கள்

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப் போகாதே படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தள்ளிப் போகாதே ரிலீஸ் தேதி
தள்ளிப் போகாதே ரிலீஸ் தேதி
author img

By

Published : Dec 17, 2021, 1:20 PM IST

'இவன் தந்திரன்', 'பூமராங்' ஆகிய படங்களை இயக்கிய கண்ணன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, முழுக்க முழுக்க காதல் நகைச்சுவையுடன் கூடிய 'தள்ளிப் போகாதே' படத்தை இயக்கியுள்ளார்.

இதில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அமிதாஷ், ஆடுகளம் நரேன், வித்யூலேகா ராமன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

தள்ளிப் போகாதே ரிலீஸ் தேதி
தள்ளிப் போகாதே ரிலீஸ் தேதி

இப்படத்தின் வெளியீட்டுத் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி கடந்த முறை அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்த நிலையில் தள்ளிப் போகாதே படம் வருகிற 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 40 கதை சர்ச்சை: தள்ளிப்போனது அஸ்வின் படம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.