விஜய் 'கைதி' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 64' எனப் பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் தொடங்கிய 'தளபதி 64' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அதில் விஜய் கலந்துகொண்டார். இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று, நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது.
சிறிது நாள் ஓய்வில் இருந்து விட்டு படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பை, கர்நாடகாவில் உள்ள பழமையான சிறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏற்கெனவே அனுமதியும் வாங்கியுள்ளனர்.
-
#Thalapathy64 Second Schedule #Delhi finish.! Back to Chennai.!👍 pic.twitter.com/FgiEpj4cxc
— Lokesh Kanagaraj (@Dir__Lokesh) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Thalapathy64 Second Schedule #Delhi finish.! Back to Chennai.!👍 pic.twitter.com/FgiEpj4cxc
— Lokesh Kanagaraj (@Dir__Lokesh) November 28, 2019#Thalapathy64 Second Schedule #Delhi finish.! Back to Chennai.!👍 pic.twitter.com/FgiEpj4cxc
— Lokesh Kanagaraj (@Dir__Lokesh) November 28, 2019
இப்படத்தில் விஜய்யுடன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தை அடுத்தாண்டு கோடைகாலத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: