சென்னை: உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதரபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணைமடைந்து திரும்பவேண்டும் என்று தெலுங்கு சினிமா பவர்ஸ்டாரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பவன் ஸ்டார் இன்று (டிச. 25) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
அவருக்கு கரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
ரஜினிகாந்த் நிறைந்த தைரியமுள்ளவர். அது மட்டுமல்லாது ஆன்மீகம் உள்ளவர். கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற்று விரைவில் குணமடைவார்.
அவர் வணங்கும் மாகாவதார் பாபாஜியின் ஆசீர்வாதங்களைப் பெற்று முழுமையான ஆரோக்கியத்துடன் நம் முன் வரவேண்டும் என்று விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்தின் உடல் ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடு, உடல் சோர்வு ஏற்பட்டதையடுத்து, அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி