சமந்தா- நாக சைதன்யா சமீபத்தில் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பலரும் இதற்கு சமந்தா தான் காரணம். அவர் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, குடும்பத்தைக் கண்டு கொள்ளவில்லை என சமூக வலைதளங்களில் வசைபாடினர்.
இதனிடையே சமந்தா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிட வேணடாம் என கூறி சமூகவலைதளப்பக்கத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இருப்பினும் சில யூடியூப் சேனல்கள் சமந்தா குறித்தும், திருமண வாழ்க்கை குறித்தும் அவதூறு பரப்பி வந்தது. அதிலும் வெங்கட் ராவ் என்னும் வழக்கறிஞர் சமந்தாவிற்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறினார். இவர்கள் மீது சமந்தா மானநஷ்ட ஈடு வழக்கை ஹைதரபாத் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று (அக்.22) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சம்பந்தப்பட்ட சேனல்கள் மீதும், நபர் மீதும் வழக்கு தொடர்வதை விட அவர்களை சமந்தா பொது மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று இல்லை. சமந்தாவின் வழக்கை நடைமுறைப்படி நீதிமன்றம் விசாரிக்கும் என்று கூறினார்.
இதையும் பாருங்க: viral video: பலூன் கேட்ச் - சமந்தாவுடன் சமத்தாக விளையாடும் நாய்..