கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் மார்ச் மாத இறுதியிலிருந்து அனைத்து விதமான படப்பிடிப்புகளும் தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து, திரைப்பிரபலங்கள் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.
தற்போது அரசின் வழிகாட்டுதல் உடனும் படப்பிடிப்பு நடத்திட அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றன. இதனையடுத்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், திரைப்படங்கள் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பை தொடங்க அனுமதி அளித்துள்ளார். அதுமட்டுமில்லாது போஸ்ட் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், குறைவான ஆட்களை வைத்து படப்பிடிப்பு தளத்தில் பணியாற்ற வேண்டும். பணியாளர்கள் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் பணியாற்ற வேண்டும். மத்திய அரசு கூறியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. திரையரங்குகளை தற்போதைக்குத் திறக்க முடியாது என சந்திரசேகர் ராவ் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்குத் திரைப் பிரபலங்கள், சந்திரசேகராவிடம் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்திருந்தனர்.
படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கிய தெலுங்கானா அரசு! - தெலுங்கானா அரசு
ஹைதராபாத்: திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்க தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது.