ETV Bharat / sitara

தமிழுக்கு வெற்றிடம் இருந்தால் அதை தமிழாற்றுப்படை நிரப்பும்: வைரமுத்து

சென்னை: தமிழுக்கு வெற்றிடம் இருந்தால் அதை ’தமிழாற்றுப்படை’ நிரப்பும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.

tamizhatruppadai
author img

By

Published : Jul 8, 2019, 9:13 PM IST

கவிஞர் வைரமுத்துவின் 38ஆவது படைப்பான "தமிழாற்றுப்படை" குறித்து சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

”தமிழுக்கு வெற்றிடம் இருந்தால் அதை தமிழாற்றுப்படை நிரப்பும். ஜூலை 12ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் என்னுடைய 38ஆவது படைப்பான "தமிழாற்றுப்படை" வெளியிடப்பட உள்ளது. எந்த நூலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்நூலுக்கு உண்டு. அவை 'விழி புத்தகமாகவும்' 'ஒலி புத்தகமாகவும்' வெளியிடப்பட உள்ளோம். 360 பக்கம் கொண்ட "தமிழாற்றுப்படை" என் குரலுடன் மெல்லிய இசை சேர்த்து ஒலி வடிவில் வெளியிடப்படுகிறது. தமிழர்கள் சற்று புத்தகம் வாசிப்பை விட்டு விலகி இருப்பதாக என் மனதில் தோன்றியது, அதன் சாயலாக அமைந்ததுதான் இந்த ஒலி புத்தகம்.

பெற்ற குழந்தைகளுக்காக சம்பாதிக்கும் பெற்றோர்கள், குழந்தைகளை பார்க்க மறந்துவிட்டார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழை கற்று கொடுக்க இந்த ஒலி புத்தகம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். தமிழுக்கு வெற்றிடம் இருந்தால் அதை நிரப்பும் பொருட்டாக "தமிழாற்றுப்படை" இருக்கும்.

நான் எழுதிய 37 படைப்புகளில், என்னுடைய 17 புத்தகங்களை வெளியிட்டவர் கருணாநிதி. ஆனால் இன்று அவர் இல்லையே என்ற ஏக்கம் வருகிறது. ஆனால் தான் இல்லாத இடத்தை தன் மகனை வைத்து அவர் நிரப்புவார் என அவர் சொன்னதுபோல் என் ஆழ்மனதில் தோன்றுகிறது. அதிகப்படியான எதிர்ப்புகளை கடந்து வந்தது தான் 'தமிழாற்றுப்படை'. எனக்கு எதிர்ப்புகளை தந்தவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். அவர்களின் மீது வருத்தம் உண்டே தவிர பழிவாங்கும் எண்ணம் இல்லை” என்றார்.

Intro:சென்னை கிண்டியிலுள்ள தனியார் விடுதியில் கவிஞர் வைரத்துவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றதுBody:கவிஞர் வைரமுத்துவின் 38வது படைப்பான "தமிழாற்றுபடை" குறித்து சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியதாவது,

தமிழுக்கு வெற்றிடம் இருந்தால் அதை தமிழாற்றுப்படை நிரப்பும் - நான் இல்லாத வெற்றிடத்தை என் மகனை வைத்து நிரப்ப பார் என்று மறைந்த கலைஞர் கூறியது போல் தோன்றுகிறது அதேபோல எம் படைப்பை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

ஜூலை 12ம் தேதி காமராஜர் அரங்கத்தில் என்னுடைய 38வது படைப்பான "தமிழாற்றுப்படை" வெளியிடபட உள்ளது. எந்த நூலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்நூலுக்கு உண்டு அவை 'விழி புத்தகமாகவும்' 'ஒளி புத்தகமாகவும்' வெளியிடப்பட உள்ளோம். 360 பக்கம் கொண்ட "தமிழாற்றுபடை" என் குரளுடன் மெல்லிய இசை சேர்த்து ஒளிவடிவில் வெளியிடப்படுகிறது.தமிழர்கள் சற்று புத்தகம் வாசிப்பை விட்டு விலகி இருப்பதாக என் மனதில் தோன்றியது, அதன் சாயலக அமைந்தது தான் இந்த ஒலி புத்தகம்.

பெற்ற பிள்ளைகளுக்காக சம்பாதிக்கும் காரணத்தினால், பிள்ளைகளை பார்க்க மறந்த விட்டார்கள் பெற்றோர்கள்,அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழை கற்று கொடுக்க இந்த ஒலி புத்தகம் பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும்.

தமிழுக்கு வெற்றிடம் இருந்தால் அதை நிரப்பும் பொருட்டாக "தமிழாற்றுப்படை" இருக்கும்,

நான் எழுதிய 37 படைப்புகளில், எம் 17 புத்தகங்களை வெளியிட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், ஆனால் இன்று அவர் இல்லையே என்ற ஏக்கங்கள் வருகிறது. ஆனால் ஒன்று தோன்றுகிறது நான் இல்லாத வெற்றிடத்தை என் மகனை வைத்து நிரப்ப பார் என கலைஞர் சொன்னது போல் என் ஆழ்மனதில் தோன்றுகிறது என்றார்.

அதிகப்படியான எதிர்ப்புகளை கடந்து வந்தது தான் தமிழாற்றுப்படை. எனக்கு எதிர்ப்புகளை தந்தவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், அவர்களின் மீது வருத்தம் உண்டே தவிர பழிவாங்கும் எண்ணம் இல்லை.

Conclusion:வெளியிடப்படவுள்ள புத்தகத்தின் அட்டை படத்தில் இருக்கும் முகம் ஆதி மனிதனின் முகம், காரணம் ஆதியில் இருந்து வந்தது தான் எங்கள் தமிழ் எனவும் தவம் செய்தால் தான் தமிழை புரிந்துகொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது தான் அட்டை படத்தில் அமைந்துள்ள முகம் என்றார்.

மேடைப்பேச்சு மோஜோவில் அனுப்பி உள்ளேன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.