தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உயர்மட்ட குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் இன்று (பிப். 23), நடைபெற்றது. இதில், சங்க தலைவர் முரளி ராமசாமி, செயலாளர் மன்னன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் முன்னாள் தலைவர்கள் முரளிதரன், எஸ்ஏ சந்திரசேகரன், கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துடன் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் இணைந்து ஓடிடி ரிலீஸ், திரைப்படங்கள் வெளியீடு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துடன் பேசி முடிவு செய்யப்படும்.
டிஜிட்டல் சர்வீஸ் சேவையாளர்களுடன் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் இணைந்து விபிஎஃப் சேவைக்கான தொகை குறித்தும் கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திரைப்படங்கள் படப்பிடிப்பின்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகத்துடன் உயர்மட்ட குழு உறுப்பினர், நிர்வாகிகள் இணைந்து கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓடிடி விவகாரம் - அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்கள் சங்கம்!