கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ்த் திரையுலக வேலைகள் முடங்கி உள்ளன. இதனால் நடிகர், நடிகைகள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. பல நடிகர்கள் இந்த விடுமுறை நேரத்தில் வீட்டு வேலைகளை செய்வது, சமையல் வேலைகளை செய்வது, ஆன்லைனில் கச்சேரி நடத்துவது, விழிப்புணர்வு வீடியோக்கள் செய்வது, தங்களைத் தாங்களே போட்டோ எடுத்துக் கொள்வது போன்ற வித்தியாசமான வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி பொழுதைக் கழித்து வருகின்றனர்.
இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், நடிகை கீர்த்தி பாண்டியன் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக திரை உலகில் அறிமுகமான இவர் நடிகர் அருண்பாண்டியனின் மகள் ஆவார். இவர் லாக் டவுனில் தங்களுக்குச் சொந்தமான பண்ணை நிலத்தில், முழுமூச்சோடு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். கீர்த்தி பாண்டியன் வயலை டிராக்டர் மூலம், தாமே உழுது ஆற்று நடவிலும் ஈடுபட்டுள்ளார்.
சேற்றில் இறங்கி நாற்று நட்டு முழுநேர விவசாயியாக மாறி உள்ளார், பாண்டியன். தாம் அன்றாடம் செய்யும் விவசாயப் பணிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார், கீர்த்தி பாண்டியன். பதிவில் மனசுக்கு நிறைவான வேலை செய்ததாகப் பதிவிட்டுள்ளார். இதற்கு ஏராளமான நெட்டிசன்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க...பல ஆண்டுகளாக அக்கறையில்லாமல் இருக்கும் அரசு... சொந்த செலவில் சாலை அமைத்த கிராமம்...!