திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பெரும்பாலானோர் முன்பு எல்லாம் சின்னத்திரையில் நடிக்கவோ, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவோ தயக்கம் காட்டுவார்கள்.
ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டனர். கமல் ஹாசன் தொடங்கி விஜய்சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் நடிகை தமன்னா எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காத நிலையில், தற்போது ’மாஸ்டர் செப்’ என்ற தெலுங்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.
முதல்முறையாகத் தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்துள்ள இவரின் நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதையும் படிங்க: பல நாடுகள்...பல மொழிகள்... ஒரு சுருளியின் 'ஜகமே தந்திரம்'!