கப்பல் பட இயக்குநர் கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டக்கர்'. இதில் யோகி பாபு அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
படத்தில் யோகி பாபு கதாபாத்திரத்தின் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதில் திவ்யான்ஷா கௌஷிக், அபிமன்யு சிங், முனீஸ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் படத்தை தயாரிக்கிறது.
இதனிடையே இப்படத்தின் கிளிம்ஸ் நாளை மாலை வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. விரைவில் புதிய ரிலீஸ் தேதியிடன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'பல்லு படாம பாத்துக்க' படம் எப்போது ரிலீஸ்?