இயக்குநர் பாண்டிராஜ் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இன்று 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் டீசரை (பிப்ரவரி 18) மாலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ஆக்சன் அதிரடி கலந்த டீசர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: இருளர் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் 'இருளி'