ETV Bharat / sitara

ஐஎம்டிபியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த சூர்யாவின் 'சூரரைப் போற்று' - சூர்யாவின் சூரரைப் போற்று

சென்னை: சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் ஐஎம்டிபி தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Suriya
Suriya
author img

By

Published : May 17, 2021, 5:55 PM IST

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, ‎அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. திரைப்படம் வெளியானதிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த இந்தப் படத்தில் பரேஷ் ராவல், மோகன் பாபு, கருணாஸ், ஊர்வசி, விவேக் பிரசன்னா உள்ளிட்டப் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஓடிடி தளத்தில் தமிழில் வெளியான பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுவாகும்.

'சூரரைப் போற்று' திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ரூ. 100 கோடிக்கும் மேல் ப்ரீ பிசினஸ் செய்து ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தது. அதுமட்டுமல்லாது, இந்தாண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பொதுப் பிரிவில் தேர்வானது. அதுமட்டுல்லாது ஓடிடி தளத்தில் 50 மில்லியன் பேர் பார்த்த படம் என்ற சாதனையை 'சூரரைப் போற்று' பெற்றது.

அமேசான் ப்ரைமில் இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. ஆஸ்கர், கோல்டன் குளோப், ஷாங்காய் உள்ளிட்டப் பல சர்வதேச திரைப்பட விருதுகளில் கலந்துகொண்டுள்ளது.

உலகம் முழுவதும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு பத்து மதிப்பெண் அளவில் வாடிக்கையாளர்கள் வழங்கும் மதிப்பெண் அடிப்படையில், இந்த ஐஎம்டிபி (IMDb) இணையத்தில் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஐஎம்டிபி (IMDb) இணையத்தில் 'சூரரைப் போற்று' திரைப்படம் 9.1 மதிப்பீட்டில் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தி ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் (1994) முதலிடத்திலும் தி காட்பாதர் (1972) இரண்டாவது இடத்திலும் உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.