ETV Bharat / sitara

திரையரங்கில் வெளியாகும் சூரரைப் போற்று? - திரையரங்கில் வெளியாகும் சூரரைப் போற்று

சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தை ஓடிடி-இல் ஏராளமானோர் பார்த்து ரசித்தபோதிலும், விஷூவல் ட்ரீட்டுடன் கூடிய அந்தப் படத்தை பெரிய திரையில் காண ரசிகர்கள் மீண்டும் திரையரங்கம் நோக்கி வருவார்கள் என கருத்தில் கொண்டு படத்தை மீண்டும் திரையரங்கில் வெளியிட முயற்சிகளை படத்தயாரிப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

Suriya soorarai potry to rerelease on theaters
திரையரங்கில் வெளியாகும் சூரரை போற்று
author img

By

Published : Dec 8, 2020, 6:41 PM IST

சென்னை: சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற சூரரைப் போற்று திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஓடிடி நேரடியாக நவ. 12ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. சூர்யா நடித்திருந்த சூரரைப் போற்று. படம் நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருந்தபோதிலும் சூரரைப் போற்று படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்ததுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. அத்துடம் படம் திரையரங்கில் வெளியிட்டால் மீண்டும் பார்க்கலாம் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற படத்தை திரையரங்கில் பார்க்காமல் விட்டோமே என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

இதையடுத்து இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்த சூரரைப் போற்று படத்தை தற்போது திரையரங்குகளில் வெளியிட பேச்சு வார்த்து நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Suriya soorarai potry to rerelease on theaters
சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று

கரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு தற்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு அரசு வகுத்த நெறிமுறைகளின்படி செயல்பட்டு வருகிறது. திரையரங்குகளில் தனிப்பட்ட இடைவெளியுடன் ரசிகர்கள் படங்களை பார்த்து செல்கின்றனர்.

நல்ல விஷூவல் ட்ரீட்டுடன் அமைந்திருந்த சூரரைப் போற்று படத்தை ஓடிடி-இல் ஏராளமானோர் பார்த்து ரசித்தபோதிலும், அந்த மேஜிக்கை பெரிய திரையில் காண ரசிகர்கள் மீண்டும் திரையரங்கம் நோக்கி வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு படத்தை மீண்டும் திரையரங்கில் வெளியிட படத்தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், தற்போது பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் திரையரங்கில் ரிலீசாகாத நிலையில், மாஸ் ஹீரோவான சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தை திரையரங்கில் மீண்டும் வெளியீட்டு வசூலை குவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இறுதிச்சுற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் இயக்கியுள்ள இந்தப் படம் ஏர்டெக்கான் விமான நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ளது.

நடிகை அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பர்வேஷ் ராவல், மோகன் பாபு, கருணாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் பிரதான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை சிக்யா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

இதையும் படிங்க: கத்ரீனா கைஃப் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.