நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள காணொலியில், " ஒருத்தர் படித்தால் அந்த வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படித்தால் இந்த நாடே மாறும். கரோனா நெருக்கடியில் மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியில் கைவிட்டு விடுகின்றனர். நாம் நினைத்தால் அதை மாற்றலாம்" என அந்த காணொலியில் சூர்யா பேசியிருக்கிறார்.
மேலும் அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் சார்பில் கரோனா கால நிதி உதவிக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பையும் சூர்யா வெளியிட்டுள்ளார்.
-
ஒன்றிணைவோம்... மாணவர்களோடு துணை நிற்போம்...#AgaramCovidEduFund pic.twitter.com/ZTIZN5rQCA
— Suriya Sivakumar (@Suriya_offl) September 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ஒன்றிணைவோம்... மாணவர்களோடு துணை நிற்போம்...#AgaramCovidEduFund pic.twitter.com/ZTIZN5rQCA
— Suriya Sivakumar (@Suriya_offl) September 14, 2020ஒன்றிணைவோம்... மாணவர்களோடு துணை நிற்போம்...#AgaramCovidEduFund pic.twitter.com/ZTIZN5rQCA
— Suriya Sivakumar (@Suriya_offl) September 14, 2020
முன்னதாக, நேற்று நீட் தேர்வு அச்சத்தால் தமிழ்நாட்டில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், "நீட் போன்ற "மனுநீதி" தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.
கரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து காணொலி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது" என கடுமையாக சாடியிருந்தார்.
இதையும் படிங்க: 'உயிருக்கு பயந்து காணொலி மூலம் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களை தேர்வு எழுத சொல்கிறது' - சூர்யா காட்டம்