ETV Bharat / sitara

கோல்டன் க்ளோப் விருது நிகழ்ச்சியில் திரையிட 'சூரரைப் போற்று' தேர்வு - சூரரைப் போற்று

கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில், சூர்யா நடிப்பில் வெளியான "சூரரைப் போற்று" படம் திரையிடவுள்ளது.

surarai potru movie
surarai potru movie
author img

By

Published : Dec 20, 2020, 8:18 PM IST

2டி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்திய ராணுவத்தில் கேப்டன் பதவியில் இருந்தவரும், ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனருமான கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் ஏழை மக்களுக்கு விமான பயணத்தை சாத்தியப்படுத்த குறைந்த விலையில் விமான சேவையை ஏர் டெக்கான் வழங்கி வருவது குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டது.

ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான முதல் உயர் சிந்தனை கொண்ட திரைப்படம் என்ற பெருமையை சூரரைப் போற்று பெற்றது. நவம்பர் 12, 2020 அன்று அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான இந்த படம், உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் பேசும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

surarai potru movie
surarai potru movie

இந்த படத்துக்கு ஐஎம்டிபி தளத்தில் 10 புள்ளிகளுக்கு 8.8 புள்ளிகள் என்ற உயர்ந்த மதிப்பீடை ரசிகர்கள் வழங்கினர். உலகம் முழுவதும் தமிழ் மக்களின் மனங்களை வென்ற சூரரைப் போற்று, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 78ஆவது கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் திரையிடவுள்ளது.

இந்த விருது வழங்கும் விழாவில் போட்டியிட அனுமதி பெற்ற முதல் ஓடிடி வெளியீட்டு திரைப்படம் சூரரைப் போற்று. கரோனா நெருக்கடி காரணமாக இந்த விழாவில் போட்டியிடும் திரைப்படங்களுக்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களும் கோல்டன் க்ளோப் மற்றும் அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதி பெற்றுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.