ETV Bharat / sitara

'OMG' சன்னி லியோன் - வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் 90'ஸ் கிட்ஸ்! - சினிமா அண்மைச் செய்திகள்

OMG ஹாரர் காமெடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகவுள்ள சன்னிலியோன், விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இப்போதே 90'ஸ் கிட்ஸ்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

OMG
OMG
author img

By

Published : Sep 2, 2021, 5:52 PM IST

Updated : Sep 2, 2021, 7:05 PM IST

சென்னை: வரலாற்றுப் பின்னணி கொண்ட ஹாரர் காமெடி திரைப்படத்தின் மூலம், இளைஞர்களின் கனவுக்கன்னியான நடிகை சன்னி லியோன் தமிழ் திரையுலகில் தனது பயணத்தினைத் தொடங்கவுள்ளார்.

அறிவிக்கப்பட்ட நாள்முதலே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வரும் இந்த படத்திற்கு "OMG (ஓ மை கோஸ்ட்)" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சன்னி லியோன்
சன்னி லியோன்

பொருத்தமான தலைப்பிட்ட படக்குழு

விஏயு மீடியா எண்டர்டெயின்மெண்ட் & ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் டி.வீரா சக்தி மற்றும் கே.சசிகுமார் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்து வழங்குகின்றனர்.

இது குறித்து அவர்கள் பேசுகையில், "பொதுவாக இன்று அனைவரும் "ஓ மை காட் (OH MY GOD)" என்ற வார்த்தையை பிரயோகித்து வருகின்றனர். உரையாடலின் போது ஆச்சரியமான தரும் எந்த ஒரு தகவலைக் கேட்கும்போதும், தெரிவிக்கும்போதும், இந்த சொல் தவிர்க்க முடியாததாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படமும் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் தரும் பல விஷயங்களை கொண்டிருப்பதால், "OMG - OH MY GHOST (ஓ மை கோஸ்ட்)" என்ற தலைப்பு பொருத்தமானதாக இருக்கும் என நம்பினோம். அதன்படி ரசிகர்கள் ஒரு மாறுபட்ட பேயை திரையில் காண்பார்கள். இந்தத் திரைப்படம், நாம் இதுவரையிலும் திரையில் கண்டிராத, ஒரு வித்தியாமான ஹாரர் அனுபவத்தைத் தரும்” என்றனர்.

சன்னி லியோன்
சன்னி லியோன்

குதூகலத்தில் 90'ஸ் கிட்ஸ்!

சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, பிரபல நடிகை தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்க துரை மற்றும் சில முக்கிய நட்சத்திரங்கள் உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.

OMG சன்னி லியோன்
OMG சன்னி லியோன்

இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் டி. மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். 'சிந்தனை செய்' படத்தை இயக்கி, புகழ் பெற்ற இயக்குநர் ஆர்.யுவன், இந்த படத்தை எழுதி இயக்குகிறார்.

சன்னி லியோன்
சன்னி லியோன்

விரைவில் நடிகை சன்னி லியோன் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என வெளியாகியுள்ள தகவல், பல ஆண்டுகளாக சிங்கிளாக சுற்றும் 90'ஸ் கிட்ஸ்கள் பலரையும் குதூகலமடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியான படங்கள் தியேட்டருக்கு வருமா?

Last Updated : Sep 2, 2021, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.