இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கும் 'தாராள பிரபு' திரைப்படத்தில் நடிகர் ஹரீஷ் நடித்துள்ளார். இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா, யாமி கௌதம் நடிப்பில் வெளியான 'விக்கி டோனர்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் இத்திரைப்படம்.
இந்தப் படத்தில் பிரபல ஸ்டேன்ட் அப் காமெடியன் அலெக்ஸாண்டர் பாபு பாடகராக அறிமுகமாகிறார். 'அலெக்ஸ் இன் வொன்டர்லாண்ட்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான அலெக்ஸுக்கு திரைப்பட வாய்ப்பும் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது இந்தப் படத்தில் 'ராசா மவன்' என்ற பாடலை அலெக்ஸ் பாடியுள்ளார்.
'தாராள பிரபு' படத்தில் அனிருத், விவேக் மெர்வின், ஊர்கா, சீன் ரோல்டன் உள்ளிட்ட எட்டு இசையமைப்பாளர்கள் பணிபுரிந்துள்ளனர். வரும் மார்ச் மாசம் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் தனது ரசிகையை ஆச்சரியப்படுத்திய பாப் இசை மன்னன் ஜஸ்டின் பீபர்