ஆந்திராவில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் காஜூவாஹா மற்றும் பீமவரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ’மீ டு’ மூலம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி பவன் கல்யாண் குறித்து பேசுகையில், “பவன் கல்யாணுக்கு முதலமைச்சராகும் தகுதி கிடையாது. ஆந்திராவை சரியாக வழிநடத்தும் சக்தி அவருக்கு இல்லை. மேலும் அவரிடம் உள்ள கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை. அவருக்கு போதிய கல்வியறிவு இல்லை. ஆகவே அவரால் ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆதிகாரிகளை சரியாக வழிநடத்தமுடியாது. பவன் கல்யாணை மக்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் ஆந்திரா மாநிலத்தின் மிக மோசமான முதலமைச்சராக பவன் கல்யாண் இருப்பார்” என்றார்.
நாளை ஆந்திராவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஸ்ரீரெட்டியின் இந்த பேச்சு அம்மாநில அரசியிலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.