உலகளவில் அச்சுறுத்திவரும் பெருந்தொற்றான கரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகள் தவிர, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கரோனா, ஊரடங்கும் குறித்து பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், “காலராவைத் துரத்திட்டோம்... மலேரியாவை விரட்டிட்டோம், அதே போல கரோனாவை அழிப்போம், சகோதரா நம்ம அரசாங்கம் சொல்லுவதைக் கேட்கனும்” என்று முழுக்க முழுக்க கரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு வரிகள் இடம் பெற்றுள்ளன.
இப்பாடலை ஏ.ஆர்.பி ஜெயராம் எழுதியுள்ளார். வாசு ராவ் சல்லூரி இசையமைத்துள்ளார். நமது ராமோஜி குழுமத்தின் தொலைக்காட்சியான ஈடிவி, ஈடிவி பாரத்துடன் இணைந்து, இப்பாடலை தயாரித்து வெளியிட்டுள்ளோம்.
இதையும் படிங்க: 'நாடகம், மேடை கலைஞர்களுக்கு உதவுக'- சரவணன் வேண்டுகோள்