தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலான படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை தென்னிந்திய முன்னணி ஹீரோக்கள் குறிவைத்துள்ளனர். மகேஷ்பாபு நடித்துள்ள 'சர்காரு வாரி பாட்டா', பிரபாஸின் 'ராதே ஷ்யாம்', விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்', ராணா - பவன் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் ’அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக் ஆகியவை பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளன.
இதுமட்டுமின்றி மேலும் சில தமிழ் படங்கள் இந்த பட்டியலில் இணைய வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டமாக ரஜினியின் 'அண்ணாத்த' திரையில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகளவில் சாதனை படைத்த 'மாஸ்டர்'!