ETV Bharat / sitara

நடிகர் சங்கத் தேர்தல்: படையெடுத்து வந்த நடிகைகள்

சென்னை: மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றுவரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர், நடிகைகள் ஏராளமானோர் வந்து வாக்களித்தனர்.

நடிகைகள்
author img

By

Published : Jun 23, 2019, 11:12 AM IST

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றுவருகிறது. தேர்தலில் வாக்களிக்க நாடக கலைஞர்கள், திரைப்பட நடிகர்கள் பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர்.

இந்த நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி - சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகின்றன. காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஐந்து மணியுடன் நிறைவடைகிறது.

தேர்தலில் வாக்களித்த நடிகர், நடிகைகள் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ரோகினி கூறியதாவது, நடிகர் சங்கத்திற்கான தேர்தல் பல தடைகளைத் தாண்டி நடைபெறுகிறது. ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடத்த அனுமதியளித்த நீதித் துறைக்கும் காவல் துறைக்கும் நெஞ்சார்ந்த நன்றி. விஷால், கார்த்தி மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்று அவர் கூறினார்.

இதன் பின்னர் பேசிய நடிகர் ஆரி, தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். சிலருக்கு எங்கு தேர்தல் நடக்கிறது என்பது தெரியவில்லை. அதனை முறையாக தெரியப்படுத்த வேண்டும். நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள் என அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன்பின்னர் பேசிய நடிகை கே.ஆர். விஜயா, எந்த அணி வெற்றிபெற்றாலும் நடிகர்களுக்கு நல்லது நடக்க வேண்டும்; அதுதான் எனது கோரிக்கையாக உள்ளது. நடிகர்கள், நலிந்த நாடக கலைஞர்கள் அனைவரது வாழ்க்கையில் நன்மை நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

நடிகைகளும் சகோதரிகளுமான அம்பிகா, ராதாவும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, எங்களது சினிமாக குடும்பங்கள் பிரச்னை இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அஞ்சல் வாக்குகள் சரியாக செல்லாததால் எனது இரு மகள்கள் வாக்களிக்க முடியவில்லை. நடிகர்கள் அனைவரும் வாக்களித்துவருகின்றனர் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தள்ளாத வயதிலும் வீல் சேரில் வந்து நாடக நடிகர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.