ETV Bharat / sitara

நெட்டிசன்களை 'பிரேமம்' கொள்ள வைத்த அனுபமா! - புகைப்படம்

'பிரேமம்' படத்தில் இளைஞர்களை கவர்ந்த அனுபமாவை, 'அழகின் அதிசயம்' என்று நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர்.

அனுபாமா
author img

By

Published : Jul 17, 2019, 5:17 PM IST

Updated : Jul 17, 2019, 5:37 PM IST

மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஷ்வரன். சிரித்த முகமும், ஒருபக்கம் கோதிவிட்ட சுருட்டை முடியின் அழகில் இளைஞர்கள் சொக்கி போகினர். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான படத்தில் நடிகராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.

எதார்த்தமான பேச்சு, முகம் சுழிக்காத நடிகை, எதை சொன்னாலும் சரியாக செய்பவர் என இயக்குநர்களிடம் நல்ல பெயர் பெற்றாலும், அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. நடிகை என்றாலே கிசுகிசுக்கள் வருவது சகஜம்தான். அது அனுபமா வாழ்விலும் வந்துள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் பும்ராவும் அனுபமாவும் காதலிப்பதாக செய்தி பரவியது. இது பும்ரா வாழ்வில் புயல்போல் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அனுபாமா-பும்ரா இருவரும் தலைகாட்ட முடியாத அளவிற்கு நெட்டிசன்கள் ட்ரோல் செய்யும் அளவுக்கு, இந்திய அளவிலும் அனுபமா பிரபலமானார்.

ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, தினமும் தனது புகைப்படத்தை பதிவிட்டு வருவது வழக்கம். வெள்ளை நிற உடையில் கண்களை மூடி ரோஜா பூவில் உறங்குவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அழகின் அதிசயமே அனுபமா என புகழ்ந்து பேசி வருகின்றனர்.

Intro:Body:

cini actress anupama 

Conclusion:
Last Updated : Jul 17, 2019, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.