ETV Bharat / sitara

அஜித்துடன் மீண்டும் கைகோர்க்கிறாரா ஹெச்.வினோத்? - Sources reveals ajith next movie should be direction by h vinoth

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை, பிரபல இயக்குநர் ஹெச். வினோத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெச்.வினோத்
ஹெச்.வினோத்
author img

By

Published : Jan 21, 2021, 1:50 PM IST

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற தரமான படங்களை இயக்கி கோலிவுட்டில் தனக்கான இடத்தை பிடித்தவர் ஹெச். வினோத். இதனை பார்த்த அஜித் பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பை ஹெச். வினோத்துக்கு வழங்கினார். அப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

நடிகர் அஜித்தை பொறுத்தவரையில் ஒருவரது உழைப்பு பிடித்துப்போனால் மீண்டும் மீண்டும் அவருடன் பணியாற்றுவது வழக்கம். இதேபோல்தான் இயக்குநர் சிவாவுடன் தொடர்ச்சியாக நான்கு படங்களில் பணியாற்றினார்.

அந்த வகையில், நேர்கொண்ட பார்வை இயக்குநர் ஹெச். வினோத்துக்கு, தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை அஜித் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 61ஆவது பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, வலிமை என பெயர் சூட்டப்பட்டுள்ள படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இப்படம் ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.