'பிகில்' படத்திற்குப் பிறகு, இந்தியில் உருவாகவுள்ள புதிய படத்தை இயக்குகிறார், அட்லீ. இந்த படத்தைத் தயாரித்து, நாயகனாக ஷாருக்கான் நடிக்க உள்ளார். இதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகாததால், இப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கூறப்படுகிறது.
இந்நிலையில் அட்லீ - ஷாருக்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மும்பையில் கரோனா தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதால், விரைவில் அங்கு படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படும் எனப் படக்குழு எதிர்பார்க்கின்றனர்.
நடிகர் ஷாருக்கான் தற்போது 'பதான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.