இயக்குநர் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'அண்ணாத்த'.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் எதிர்பார்த்தது போல் இல்லை என ரஜினி ரசிகர்கள் வேதனைத் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்தது யார் என உறுதி செய்த சிவா
இதனையடுத்து 'சிறுத்தை' சிவா அடுத்ததாக, நடிகர் சூர்யாவின் படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அவரே சமீபத்தில், கலந்துகொண்ட பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
மேலும் இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா தற்போது, 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் பணிகள் முடிந்தவுடன், சிவா படத்தில் இணைவதற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விருது பட இயக்குநருடன் கைக்கோர்த்த மம்முட்டி!