ETV Bharat / sitara

ரசிகர் தொடங்கிய உணவகம்: நேரில் சென்று வாழ்த்திய சோனு சூட்!

நடிகர் சோனு சூட் தனது பெயரில் ரசிகர் தொடங்கிய சாலையோர உணவகத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சோனு சூட்
சோனு சூட்
author img

By

Published : Dec 26, 2020, 9:21 AM IST

கரோனா ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த குடிபெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களது வீட்டிற்குப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுத்து நடிகர் சோனு சூட் இலவசமாக அனுப்பினார். பேருந்து மட்டுமில்லாமல், தனி விமானம் மூலமாகவும் சிலரை அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைத்தார்.

அத்துடன் வறுமையில் வாடிய விவசாயி குடும்பத்திற்கு டிராக்டர் வழங்கியது, ஸ்பெயினில் சிக்கித்தவித்த சென்னை மாணவர்களை வீடு திரும்ப, விமான வசதி செய்துகொடுத்தது என்று அடுக்கடுக்காக பல உதவிகளை நடிகர் சோனு சூட் செய்துவருகிறார்.

இந்நிலையில் நடிகர் சோனு சூட்டின் ரசிகர் ஒருவர், ஹைதராபாத்தில் ‘SONU SOOD FAST FOOD' என்ற பெயரில் சாலையோர உணவகம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதனை அறிந்து நடிகர் சோனு சூட் உடனே அங்கு சென்று தனது ரசிகருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தாமாகச் சமைத்து அவர் சாப்பிட்ட காணொலியும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சோனு சூட் பெயரில் புதிய துறை - சேவையை அங்கீகரித்த ஐஏஎஸ் அகாதமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.