மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசனுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு விபத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, அவரது காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, இன்று அக்கம்பியை அகற்றுவதற்காக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளரும், திரைப்பட பாடலாசிரியருமான சினேகன் கமலுக்கு தனது கவிதை மூலம் ஆறுதல் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், 'உனதான வழி மட்டும் எனதல்ல, உனதான வலியும் தான். கண்ணீரைத் தவிர காயம் ஆற்ற என் வசம் வேறு மருந்து இல்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
-
உனதான வழி மட்டும் எனதல்ல உனதான வலியும் தான்
— சினேகன் (@SnehanOfficial) November 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
கண்ணீரைத் தவிர
காயம் ஆற்ற என் வசம்
வேறு மருந்து இல்லை.
">உனதான வழி மட்டும் எனதல்ல உனதான வலியும் தான்
— சினேகன் (@SnehanOfficial) November 21, 2019
கண்ணீரைத் தவிர
காயம் ஆற்ற என் வசம்
வேறு மருந்து இல்லை.உனதான வழி மட்டும் எனதல்ல உனதான வலியும் தான்
— சினேகன் (@SnehanOfficial) November 21, 2019
கண்ணீரைத் தவிர
காயம் ஆற்ற என் வசம்
வேறு மருந்து இல்லை.
சினேகனின் கவிதைக்குப் பலரும் பாராட்டுகளையும், எதிர்மறையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.