நந்தா இயக்கத்தில் கவிஞர் சினேகன், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள 'குறுக்கு வழி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட சினேகன் பேசுகையில், 'கோலிவுட்டில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் குறைவு. மற்றவர்கள்தான் இங்கு வந்து செல்வத்தை எடுத்துச் செல்கின்றனர். இருந்தாலும் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு.
இத்திரைப்படம் ஒரு சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்டிருந்தாலும் மிகச்சிறப்பாக வந்துள்ளது. ஹாலிவுட் படத்திற்கு இணையாக உருவாகி வருகிறது. குறுக்குவழி திரைப்பட இயக்குநர் ஹாலிவுட்டில் படம் எடுத்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற நான்கு பேர் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்க, அதனால் வரும் விளைவுகளை இத்திரைப்படத்தில் சொல்லியுள்ளோம்.
தொழில் நுட்ப ரீதியாக சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ட்ரெய்லர் தான்' என்றார். சினேகனுக்கு திருப்புமுனையாக இருக்கும் படம் என எதிர்பார்க்கப்படுவதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: Valimai Update: 'வலிமை' விசில் தீம் மியூசிக் வெளியீடு!