ETV Bharat / sitara

'டான்' ஆன 'டாக்டர்' சிவகார்த்திகேயன்...!

author img

By

Published : Jan 27, 2021, 12:16 PM IST

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்கு 'டான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

sivakarthikeyan
sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது 'அயலான்', 'டாக்டர்' என இரண்டு படங்களில் நடித்து வந்தார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பாக பல தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் அட்லியின் உதவியாளர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'டான்' என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தை லைகா நிறுவனம், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் இப்படம் கல்லூரி வாழ்க்கையை சார்ந்து நகைச்சுவையாக எடுக்க இருப்பதாக தெரிகிறது. இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகை, துணை கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.