ETV Bharat / sitara

Sivakarthikeyan Gesture: 'டிரம்ஸ்மேனுக்காக சைகை காட்டிய சிவகார்த்திகேயன்'; நெகிழ்ச்சியில் ரசிகர்கள்! - இணையத்தில் வைரலான சிவகார்த்திகேயன் காணொலி

Sivakarthikeyan Gesture: ஆர்ஆர்ஆர் தெலுங்கு திரைப்படவிழாவின் முடிவில் அனைவரையும் பாராட்டிய நிகழ்ச்சி நெறியாளரிடம், டிரம்ஸ் மேனையும் பாராட்டும்படி சைகை காட்டிய சிவகார்த்திகேயனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sivakarthikeyan Gesture
Sivakarthikeyan Gesture
author img

By

Published : Dec 28, 2021, 6:48 PM IST

Updated : Dec 28, 2021, 8:52 PM IST

Sivakarthikeyan Gesture: பாகுபலி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆர்ஆர்ஆர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

'ஆர்ஆர்ஆர்' படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது. தமிழில் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 27) சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டப் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சிவகார்த்திகேயன் சைகை காட்டியது தொடர்பான காணொலி

நிகழ்ச்சியின் முடிவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாவனா, விஜய் ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். அப்போது டிரம்ஸ் வாசித்தவரின் பெயரைக் கூற மட்டும் நெறியாளர்கள் மறந்து விட்டனர்.

இதனைக் கவனித்த சிவகார்த்திகேயன், சைகையிலேயே டிரம்ஸ் வாசிப்பவரின் பெயரைச் சொல்லும்படி நெறியாளரிடம் அறிவுறுத்தினார்.

தற்போது இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: jhansi web series: அஞ்சலியின் 'ஜான்சி' இணையத் தொடர் பிரத்யேக வெளியீடு!

Last Updated : Dec 28, 2021, 8:52 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.