சென்னை: 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தின் பாடல்கள், டீசர் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டார்
பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இந்தப் படத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்,
படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா. இந்தப் படம் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும்.
படத்தின் பாடல், டீசர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இசை குறுந்தகட்டை வெளியிட்டார்.
பின்னர் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் முழுநில நகைச்சுவைத் திரைப்படம். ரியோவும் நானும் டெலிவிஷன் நடிகர்கள்.
நாங்கள் இருவரும் இன்று ஒரே மேடையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, படத்தின் கதாநாயகன் ரியோ ராஜ் யுவராஜ் மக்கள் மனதில் இடம் பெற்றவர். சமீபத்தில் அவருக்குக் குழந்தை பிறந்து அப்பாவானதற்கு வாழ்த்துகள் என்றார்.