நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'டாக்டர்'. சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்செய்து சாதனை செய்திருக்கும் இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'டான்' படத்தில் கவனம் செலுத்திவருகிறார். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகியுள்ள இதனை லைகா நிறுவனத்துடன் இணைந்து எஸ்.கே. புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: IMDB- யில் விஜய் செய்த சாதனை - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்