ETV Bharat / sitara

'அண்ணன் தங்கை பாசத்துக்கு விதை போட்டது நாங்கதான்'- 59 Years of Pasamalar - பாசமலர் திரைப்படம் சிறப்புக் கட்டுரை

அண்ணன்-தங்கையின் அன்புக் கதைகள் பூமி பிறந்த போதே தோன்றியவை. ராவணன் - சூர்ப்பனகையின் கண் மூடித்தனமான ராட்சஸ பாசம் ராமாயணத்துக்கு விதையாக விளங்கியது. புராணங்கள் முதல் இன்றைய திரைக்காவியங்கள் வரை சகோதரத்துவத்தை போற்றும் ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் மணி மகுடமாய் இருக்கும் திரைப்படம் என்றால் அது 'பாசமலர்' திரைப்படம்தான்.

Sivaji  Savitri starrer Pasamalar movie throwback story

author img

By

Published : May 28, 2020, 11:25 AM IST

Updated : May 28, 2020, 11:45 AM IST

அண்ணன்-தங்கையின் அன்புக் கதைகள் பூமி பிறந்த போதே தோன்றியவை. ராவணன் - சூர்ப்பனகையின் கண் மூடித்தனமான ராட்சஸ பாசம் ராமாயணத்துக்கு விதையாக விளங்கியது. புராணக் காப்பியங்கள் முதல் இன்றைய திரைக்காவியங்கள் வரை சகோதரத்துவத்தை போற்றும் ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. 'நினைத்ததை முடிப்பவன்', 'முள்ளும் மலரும்', 'தங்கைக்கோர் கீதம்', 'கிழக்குச் சீமையிலே', 'சின்னத்தம்பி', 'சமுத்திரம்', 'சொக்கத் தங்கம்', 'திருப்பாச்சி' என அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து வளமான படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றுக்கெல்லாம் மணி மகுடமாய் இருக்கும் திரைப்படம் என்றால் அது 'பாசமலர்' திரைப்படம்தான். அது குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு...

Sivaji  Savitri starrer Pasamalar movie throwback story
பாசமலர்

இயக்குநர் பீம்சிங், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்ரி, ஜெமினி கணேசன், கவிஞர் கண்ணதாசன், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி, பின்னணி பாடகர் டி. எம். எஸ், பாடகி சுசிலா, இப்படி ஒரு அற்புதமான காம்பினேஷனில் வெளிவந்த படம். ராஜாமணி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் சிவாஜியும், சாவித்ரியும் அண்ணன் தங்கைகளாக வாழ்ந்து காட்டினர்.

அண்ணன் தங்கை பாசம்

கர்வங்கள் அழிந்து காதல் ‘அலைபாயுதே’ - #20yearsofalaipayuthey

"சேர்ந்தே பிறந்து... சேர்ந்தே வளர்ந்து... சேர்ந்தே மறைந்த செல்வங்களின் கதை" என்ற விளம்பரத்தோடு 1961ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி திரைக்கு வந்தது பாசமலர். அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுத்த படங்களில் இப்படம் 32 வாரங்கள் ஓடி, காவிய அந்தஸ்து பெற்றது. சிவாஜி, ஜெமினி, சாவித்ரி ஆகியோரின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரக் கல்லாய் அமைந்தது இந்தப் படம்.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே இறவாப் புகழ் பெற்ற பாடல்கள். குறிப்பாக, சிவாஜியும் சாவித்ரியும் வெவ்வேறு வீடுகளில் தங்கள் குழந்தைகளைத் தாலாட்டும் பாடலான, “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே” என்ற பாடல் எத்தனை யுகங்கள் கடந்தாலும், திரை இசைத் தாலாட்டுப் பாடல்களில் சோகமும் அன்பும் பாசமும் இழையோடி காலத்தால் அழியாக காவியப் பாடலாக இன்றும் உள்ளது.

பாசமலர்களின் பாசப்போராட்டம்

புதிதாகப் பிறந்திட நான் புத்தனில்லை வழிவிடு - #14yearsofpudhupettai

‘கை வீசம்மா கை வீசு’, 'நீங்கள் மவுனமா இருந்தாலும் ஆயிரமாயிரம் அன்புக் கதைகளை எனக்குச் சொல்லுமே- அந்தக் கண்கள் எங்கே அண்ணா?' போன்ற வசனங்களும் அந்தக் காலத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டது. இந்தப் படத்தை இயக்கிய பீம்சிங்கின் ‘பா’ வரிசைப் படங்களில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த இந்தப் படம் தெலுங்கிலும் ‘டப்’ செய்யப்பட்டது. பிறகு இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது.

சாவித்திரி, ஜெமினி கணேஷன்

1961ஆம் ஆண்டு கோடையில் தொடங்கிய 'பாசமலர்' மாரத்தான் ஓட்டம் 2020இல் இன்னமும் மங்காமல் சின்னத் திரைகளிலும் வியாபித்து நிற்கிறது. வருடம் தவறாமல் அனைத்து சேனல்களிலும் சலிக்காமல் இன்னும் வாசம் வீசும் 'பாசமலர்'. இந்தத் திரைப்படத்தில் நடித்து இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிற திரை ஜாம்பவான்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம்.

இதையும் படிங்க... இது காதலுமல்ல, நட்புமல்ல... எல்லையற்ற பேரன்பு - 4 Years Of Kadhalum Kadanthu Pogum

Last Updated : May 28, 2020, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.