ETV Bharat / sitara

'சிங்கம்' வில்லனை கைது செய்த காவல்துறை!

சிங்கம் 3 படத்தில் வில்லான நடித்த நைஜீரிய நடிகர் ஜேசனை டெல்லி விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

singam
author img

By

Published : Oct 28, 2019, 9:52 AM IST

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் சிங்கம். இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கவே தொடர்சியாக சிங்கம் 2, சிங்கம் 3 என படங்கள் எடுக்கப்பட்டன. தற்போது சிங்கம் 4 எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கம் 3 படத்தில் நைஜீரிய நடிகர் முகமது அகான்பி ஒஜரா (எ) ஜேசன் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தியில் தங்கல், ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஜேசன் சந்தேகத்துக்குரிய நிலையில் சுற்றி வந்ததாக, பாதுகாப்புப் படையினர் அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பாதுகாப்புப் படையினர் விமான நிலைய காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர். அவரது விசாவை சோதித்துப் பார்க்கையில் 2011ஆம் ஆண்டோடு விசா காலாவதியாகியிருந்தது தெரியவந்தது. இத்தனை ஆண்டுகளாக அவர் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததையும் கண்டுபிடித்தனர்.

singam
நைஜீரிய நடிகர் முகமது அகான்பி ஒஜரா (எ) ஜேசன்

இதனையடுத்து ஜேசனை உடனே கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உளவுத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

ஜேசன் இந்தியப்படங்களில் மட்டுமல்லாது நைஜீரிய படங்களான 'கிங் ஆஃப் மை வில்லேஜ்', 'சூப்பர் ஸ்டோரி' உள்ளிட்ட படங்களிலும் நடித்து அங்கு பிரபலமானவர்.

Intro:Body:

Singam actor arrested

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.