ETV Bharat / sitara

’20 வருட நட்பு’ - சிம்பு குறித்து நெகிழ்ந்த மகத்! - latest cinema news

சென்னை: நடிகர் மகத், சிம்பு தன்னைப் பற்றி பேசியுள்ள பழைய காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிம்பு
சிம்பு
author img

By

Published : Dec 2, 2020, 1:23 PM IST

தல அஜித்தின் மங்கத்தா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், நடிகர் மகத். அதைத் தொடர்ந்து ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்தார். இவர் நடிகராக அவதாரம் எடுப்பதற்கு முன்பிலிருந்தே நடிகர் சிம்புவிற்கு நெருங்கிய நண்பர் ஆவார்.

இவர் அடிக்கடி சிம்புவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களைத் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகிறார். அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு தன்னைப் பற்றி கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 20 வருட நட்பு என்று அதில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும் காணொலியில் பேசிய சிம்பு, ”கடினமான காலக்கட்டங்களில் என்னுடன் நின்றவர் மகத். இவர் மிகவும் உண்மையானவர்” என்று கூறியுள்ளார். அந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதையும் படிங்க: பாடகர் அவதாரம் எடுக்கும் விஜயகாந்த் மகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.